பாகிஸ்தானில் ஒவ்வொரு வருடமும் 5 ஆயிரம் பெண்களுக்கு மேல் கௌரவக் கொலை அல்லது சித்ரவதை செய்து கொலை செய்யப்படுகிறார்கள் என மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய மனித உரிமை அமைப்பின் இயக்குனர் வைத்தியர் சர்வாபாரி இதனை தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு ஆதரவாக எந்த முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் அதை மத குருமார்கள் தடுக்கிறார்கள் எனவும் இது தொடர்பாக சட்டங்கள் கொண்டு வரப்பட்டாலும் அவற்றையும் தடுத்து நிறுத்தி விடுகிறார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இன்று, பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிராக அதிக அளவில் கொடூர செயல்கள் நடக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் 5 ஆயிரம் பெண்களுக்கு மேல் கௌரவக் கொலை அல்லது சித்ரவதை செய்து கொலை செய்யப்படும் அதே நேரத்தில் ஆண்கள் 1,442 பேர் கொலை செய்யப்படுகிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.