193
நேற்றைய தினம் பாராளுமன்றில் விளைவிக்கப்பட்ட குழப்பம் ஏற்கனவே திட்டமிடப்பட்டது என அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியினர் மிகவும் திட்டமிட்ட வகையில் நேற்றைய தினம் பாராளுமன்றில் குழப்பம் விளைவித்து பதற்றத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
பொதுமக்களின் பணத்தை விரயமாக்கும் வகையில் மேற்கொள்ளும் இவ்வாறான நடவடிக்கைகள் கண்டிக்கப்பட வேண்டியவை என அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு பாராளுமன்றில் குழப்பம் விளைவிப்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு நாம் சபாநாயகரிடம் கோரிக்கை விடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love