164
இந்திய எல்லைக்குட்பட்ட காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் லஷ்கர் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் தீவிரவாதிகள் தங்கியிருப்பதாக கிடைத்த தகவல்களையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த இராணுவத்தினருக்கும் தீவரவாதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோலில் பாகிஸ்தானின் லஷ்கர்- இ- தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த ஜெகாங்கிர் கனாய் மற்றும்; ஷெர்குஜ்ரி ஆகியோர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் பல தாக்குதல் சம்பவங்களில் தொடர்புபட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love