பீகாரில் பாட்னா பல்கலைக்கழகத்தில் வருகிற 29-ம் திகதி மாணவர் அமைப்பு தேர்வு நடத்தப்படும். 30-ம் திகதி அதன் முடிவுகள் அறிவிக்கப்படும். இந்தநிலையில் பாட்னா பல்கலைக்கழக வளாகத்தில் பொருளாதார துறை பகுதியில் நூலகத்திற்கு வெளியே நேற்று திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இதனால் பக்கத்தில் நின்றிருந்த சமஸ்கிருத துறையின் பேராசிரியர் லட்சுமி நாராயணன் என்பவரின் சொகுசு காரின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. அத்துடன் அந்த நூலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளும் நொறுங்கி விழுந்தன. இந்த சம்பவத்திற்கான பின்னணி பற்றியும், குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்தும் காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தடயவியல் அதிகாரிகளும் வந்து குண்டுவெடிப்புக்கு பின்னர் மீதம் கிடைத்தவற்றை சேகரித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.