இரு சிறுபான்மை சமூகங்களுக்கும் அநீதி இழைக்கப்படாத வகையிலான அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொள்வதற்கு இரு தரப்புக்களுக்கும் வெ ளிப்படைத்தன்மையுடன் பரஸ்பர முன்னெடுப்புக்களை மேற்கொள்ளவேண்டும், நாட்டில் இடம்பெற்ற யுத்தம் மற்றும் பல்வேறு அரசியல் நெருக்கடியான காலகட்டங்களில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் பல இழப்புக்களை சந்தித்துள்ளதால் இனிமேலும் அவர்களுக்கு இழப்புக்கள் ஏற்படா வண்ணமான பொறிமுறையொன்றையே இரு சமூகங்களும் வேண்டி நிற்கின்றன.
கிழக்கில் இன்று பெரும்பாலான பொதுமக்களின் காணிகள் இன்னும் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளாகவே உள்ளதுடன் அவற்றில் மக்களின் பாரம்பரியக் காணிகளும் அடங்குவதால் குறித்த காணிகள் விடுவிக்கப்படாமல் மேறகொள்ளப்பட்ட எல்லை நிர்ணயத்தினால் சிறுபான்மை மக்களுக்கு எந்தளவு தூரத்துக்கு சாதகமான சூழ்நிலை உள்ளது என்பது தொடர்பில் கேள்விகள் உள்ளன.
அத்துடன் இந்த சந்தரப்பத்தில் சிறுபான்மை சமூகங்களுக்கு வெறும் வீர வசனங்களை பேசி கைதட்டல்களை பெறும் அரசியல் தலைமைகள் அவசியமல்ல,மிகுந்த நிதானமாக சாணக்கியமாக காய்நகர்த்தல்களை முன்னெடுக்கும் அரசியல் தலைமைகளே சமூகத்தின் தற்போது அவசிய தேவைப்பாடாகவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது,
மக்களும் அவ்வாறான அரசியல் தலைமைகளை புரிந்து அறிந்து அவர்களின் கரங்களை பலப்படுத்தி நமது சமூகங்களின் எதிர்கால அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்க முன்வரவேண்டும்.
இந்த தீர்மானம் மிக்க காலகட்டத்தில் உணர்ச்சி மிக்க உரைகளும் ,வீர வசனங்களும் சிறுபான்மை சமூகங்களின் உறுதியான அரசியல் இருப்புக்கு எள்ள்ளவும் துணை புரியாது என்பதை சிறுபான்மை சமூகங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பேரினவாத சிந்தனைகளும் பெரும்பான்மை அடக்குமுறை கலாசாரமும் புரையோடிப் போயுள்ள இந்த நாட்டில் சிறுபான்மை சமூகத்துக்கான நியாயமான அரசியல் தீர்வு என்பது சூட்சும்ம் மிக்க இராஜதந்திரமான மற்றும் சாணக்கியமான நகர்வுகள் மூலமே சாத்தியப்படும் என்பதில் சிறுபான்மை சமூகங்கள் தெ ளிவுபெற வேண்டும் .
இந்நிலையில் தமிழ் சமூகம் உத்தேச அரசியலமைப்பில் தமது கோரிக்கைகள் குறித்து தெ ளிவாக உள்ள நிலையில் முஸ்லிம் அரசியற்கட்சிகளில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உத்தேச அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தமது பிரதிநிதிகளுக்கு செயலமர்வுகளை நடத்தியுள்ளது.
எனவே இந்த தீர்மானம் மிக்க தருணத்தில் உத்தே தேர்தல் முறைமை திருத்தம் மற்றும் அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக சிறுபான்மை மக்கள் அவதானமாக இருக்கவேண்டும் என்பதுடன் இந்த விடயம் தொடர்பில் பொறுப்புடன் நடந்து கொள்ளும் அரசியல் தலைமைகள் யார் என்பதையும் மக்கள் அடையாளங்கண்டு கொள்ளக் கூடியதாக இருக்கும் என கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்,.