இலங்கை குறித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் தீர்மானங்கள் முழு அளவில் அமுல்படுத்தப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முழு அளவில் அமுல்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்னின் இலங்கை குறித்த அறிக்கை வரவேற்கப்பட வேண்டியது என குறிப்பிட்டுள்ளதுடன் 2015ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முழு அளவில் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரது அறிக்கை எதிர்வரும் 22ம் திகதி கலந்துரையாடப்பட உள்ளது.