187
அமெரிக்காவில் பல்வேறு இரகசிய தகவல்களை அம்பலப்படுத்திய எட்வட் ஸ்னோவ்டனுக்கு ஹொங்கொங்கில் அடைக்கலம் வழங்கிய இலங்கையர்கள் கனடாவில் புகலிடம் கோரியுள்ளனர். ஹொங்கொங்கில் தொடர்ந்தும் தங்கியிருந்தால் இந்த இலங்கையர்கள் ஆபத்துக்களை எதிர்நோக்க நேரிடும் என அவர்களது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த இலங்கையர்களை கனடாவில் குடியேற்றுவது வாழ்விற்கும் சாவிற்கும் இடையிலான பிரச்சினை என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். குறித்த இலங்கையர்களை கொழும்பு புலனாய்வுப் பிரிவினர் பின்தொடர்ந்துள்ளதாக கடந்த வாரம் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love