175
மாலைதீவு ஜனாதிபதியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக குற்றம் சுமத்தி தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையரை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த இலங்கையரின் குடும்பத்தினரை சந்தித்த போது வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் ஏ.எச்.எம். விஜேரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தனது கணவருக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட இலங்கையரின் மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love