இலங்கை

TNA யையும் , JVP யையும் பலமான எதிர்க் கட்சிகளாக உருவாக்க அரசாங்கம் முயற்சி – வாசுதேவ


தமிழ்த் தேசிய கூட்டமைப்பையும், மக்கள் விடுதலை முன்னணியையும் பலமான எதிர்க் கட்சிகளாக உருவாக்க அரசாங்கம் முற்படுவதாக  கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்  இதனைத் தெரிவித்த அவர் ஒரு வார காலத்துக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் தினேஷ் குணவர்தன இல்லாத தருணத்தில், பிரதான எதிர்கட்சியின் தலைமை யாருக்கு என்ற பிரச்சினை  காணப்படுவதாகவும் அதனால் இதனை தாங்கள்  முன்னோக்கி கொண்டுச்செல்ல தீர்மானித்துள்ளதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசின் இந்த முயற்சிக்கு, ஜே.வி.பி.யும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் துணைப்போவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சி மற்றும் அரசாங்க உறுப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட குழப்ப நிலைமை காரணமாக நாடாளுமன்றம் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply