181
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று வவுனியாவில் இடம்பெறுகின்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெறும் இந்த கலந்துரையாடலில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனையை முழுமையாக செயற்படுத்த இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென வட மாகாண சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள யோசனை தொடர்பில் கலந்துரையாடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது
Spread the love