சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை குறித்த விசாரணைகளில் அரசியல் தலையீடு செய்யப்படுவதகாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அரசியல் அழுத்தங்கள் காரணமாக விசாரணைகள் உரிய முறையில் மேற்கொள்ளாமல் விடப்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த கொலை குறித்த விசாரணைகளில் கனிசமான அளவு முன்னேற்றம் பதிவாகியுள்ள போதிலும் விசாரணைகளில் நாட்டின் உயர் மட்ட அரசியல் மற்றும் இராணுவ தலைமைகளின் தலையீடு காரணமாக விசாரணைகள் கிடப்பில் போடப்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. லசந்த கொலையுடன் நாட்டின் அதிக முக்கிய பிரபுக்கள் சிலருக்கு தொடர்பு உள்ளமை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரிடம் நடத்திய விசாரணைகளின் மூலம் இந்த விடயங்கள் அம்பலமாகியுள்ளன.
லசந்தவை கொலை செய்யுமாறு இறுதி உத்தரவு பிறப்பித்தவர் மஹிந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் கடமையாற்றிய இராணுவ கேணல் ஒருவர் எனவும், அவர் தற்போதைய அரசாங்கத்தில் முக்கிய பதவி ஒன்றை வகிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.