161
ஜப்பானிய பிரதமர் சின்சோ அபேவிற்கான மக்கள் ஆதரவு வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைக் காணி மோசடி விவகாரம் தொடர்பில் பிரதமரின் மனைவிக்கு தொடர்பு உண்டு என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறைந்த விலையில் அரச காணியொன்று தனியார் பாடசாலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஜப்பானிய எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. எனினும் அரச காணி கொள்வனவு குறித்த மோசடியில் தமக்மோ தமது மனைவிக்கோ தொடர்பு கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love