இந்தியா

பிரிட்ஜோவின் உடலைப் பெற்று அடக்கம் செய்ய போராட்டக்குழுவினர் சம்மதம்

இந்திய மத்திய அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட இணக்கத்தினைத் தொடர்ந்து, இந்திய மீனவர் பிரிட்ஜோவின்  உடலைப் பெற்று அடக்கம் செய்ய போராட்டக்குழுவினர் சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் மத்திய அமைச்சர்களான நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தங்கச்சிமடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம், மீனவர் பிரிட்ஜோவின் உடலை பெற்று நல்லடக்கம் செய்யவேண்டும் எனவும்  போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதற்கமைய  கடந்த 6 நாட்களாக மேற்கொண்டு வந்த மீனவர்கள், போராட்டத்தினைக் கைவிடுவதற்குச் சம்மதித்துள்ளனர்.

இதனையடுத்து இன்றையதினம் பிரிட்ஜோவினது உடலைப்பெற்று அடக்கம் செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர். எனினும் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாது போனால் திரும்பவும் போராட்டத்தினைத் தொடரப்போவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை  பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து இன்று 7-வது நாளாக நாகை மீனவர்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்ற நிலையில்  இன்றையதினம்  நாகை தலைமை தபால் நிலையம் முன்  உண்ணாவிரதம் ஆரம்பித்துள்ளனர்.

இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் கலந்து கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply