இலங்கையில் படையினர் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறா நிலை நீடிக்கின்றது என சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் தலைவர் யஸ்மீன் சூகா தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் இலங்கை குறித்த விசேட நிபுணர் குழுவில் சூகா அங்கம் வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதிலும் படையினர் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறாத நிலைமை நீடித்து வருவதாகவும் துஸ்பிரயோகங்கள், குற்றச் செயல்கள், வன்முறைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்டச் சம்பவங்களுடன் படையினர் தொடர்ந்தும் தொடர்புபட்டுள்ளதாகதவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் இலங்கை குறித்த சர்வதேசத்தின் நிலைப்பாட்டில் 180 பாகை மாற்றம் ஏற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.