Home இலங்கைபுதிய அரசியல் சாசனம் ஆபத்தானது – மஹிந்த ராஜபக்ஸ

புதிய அரசியல் சாசனம் ஆபத்தானது – மஹிந்த ராஜபக்ஸ

by admin


புதிய அரசியல் சாசனம் ஆபத்தானது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நாட்டையும் இனத்தையும் அழிக்கும் வகையில் அரசியல் சாசனம் அமைக்கப்பட உள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஈழப் புலம்பெயர் சமூகத்தையும், தேர்தலில் வெற்றியீட்ட உதவிய தரப்புக்களும் மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில் இவ்வாறு அரசியல் சாசனத்தில் மாற்றம் செய்வதாகத் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் கையொப்பத்தில் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் சட்டம் ஒழுங்கு விதிகளிலும் திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாகவும் இது நாட்டுக்கு ஆபத்தானது எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு கடந்த 2015ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியிருந்ததாகவும், இது ஓர் தேசத்துரோக செயல் எனவும் தெரிவித்துள்ள அவர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வகையில் இந்த அரசாங்கம் செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More