ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருந்து பிரிந்து தனி நாடாகும் நோக்கில் புதியதொரு வாக்கெடுப்பு நடத்துவதற்கு விரும்புவதாக ஸ்கொட்லாந்து முதன்மை அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் ( Nicola Sturgeon) தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய அரசு விட்டுக்கொடுப்பின்மையுடன் செயற்படுவதாக குற்றஞ் சுமத்தியுள்ள அவர், ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரித்தானியா வெளியேறுவதை ஸ்கொட்லாந்து ஏற்றுக்கொண்டாலும், ஐரோப்பிய ஒன்றிய ஒற்றைச் சந்தையிலிருந்தும் பிரித்தானியா வெளியேறுவதை ஸ்கொட்லாந்து விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இந்த வரைவை இன்று மாலை நிறைவேற்றிவிட்டால், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற முறையான செயல்முறையை நாளை செவ்வாய்க்கிழமையே பிரதமர் தெரீசா மே ஆரம்பிப்பார் என கருதப்படுகின்றது.