அந்தமான் நிக்கோபர் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 என பதிவாகியுள்ளது. எனினும்;, நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்சேதம் மற்றும் பொருள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. அந்தமான் நிக்கோபர் தீவுகள், இந்திய யூனியன் பிரதேசங்களில் ஒன்று. இந்த தீவுகளில் 2004ஆம் ஆண்டு ஏற்படட் சுனாமி, அதிக அளவிலான பாதிப்புகளை உருவாக்கியது. சுனாமியால் 2000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.
கடல் பகுதி என்பதால், இங்கு இடையிட்டு இயற்கை சீற்றங்கள் ஏற்படுகின்றன. இந்நிலையில் இன்று காலை அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு, அந்தமான் நிக்கோபர் தீவில் அடுத்தடுத்து எட்டுமுறை நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.