164
அத்து மீறி பிரவேசிக்கும் இந்திய மீனவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். குடாவெல்ல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக் கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் கடுமையாக்கப்படும் என குறிப்பிட்டுள்ள அவர் வாரத்தின் மூன்று நாட்களில் 5000 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
Spread the love