இலங்கை பிரதான செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கிளிநொச்சி போராட்டத்திற்கு தென்னிலங்கை,உள்ளுர் அமைப்புக்கள் ஆதரவு

கிளிநொச்சி இன்று செவ்வாய் கிழமை 23 ஆவது நாளாக இரவு பகலாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மேற்கொள்ளும் தொடர் போராட்டத்தில் தென்னிலங்கை மற்றும் உள்ளுர் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டுள்ளனர்.

தென்னிலங்கையிலிருந்து வருகைதந்திருந்த சுதந்திரத்திற்கான  மகளீர் அமைப்பு, சம உரிமை இயக்கம். மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமாரின் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு என்பன குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்குகொண்டிருந்தன. மேற்படி அமைப்புக்களைச் சேர்ந்த பலர் இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்;துகொண்டு தங்களின் ஆதரவினையும் தெரிவித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.