இந்தியா

பதன்கோட் விமானப்படை தளம் அருகே சந்தேகத்திற்கிடமான நபர்கள் -தீவிர தேடுதல்


பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளம் அருகே சந்தேகத்திற்கிடமான நபர்கள் ஊடுருவியதாக கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து ராணுவ வீரர்கள் தீவிர தேடுதல்  நடவடிக்கையில்  ஈடுப்பட்டுள்ளனர்.  அங்கு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் வெடிபொருட்கள் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பிலும்  தீவிர சோதனைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2016 ஆம் ஆண்டு  பதன்கோட் விமானப்படை தளத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி தொடர்ந்து 4 நாட்கள் தாக்குதல் நடத்தியதில் 7 இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் 4 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply