முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ நாட்டின் ஜனாதிபதியாகவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பிரதமராகவும் நியமிக்கப்பட வேண்டுமென முன்னாள் ராஜதந்திரி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு மிகவும் சிறந்த தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய இருவரும் இவர்களே என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் எதிர்காலத்தை செலுமையாக்க வேண்டுமாயின் கோதபாய ஜனாதிபதியாகவும், மஹிந்த பிரதமராகவும் நியமிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க ஒருபோதும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியதில்லை எனவும், சுதந்திரக் கட்சி நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்ய அனுமதிக்காது எனவும் குறிப்பிட்டுள்ள அவர் கோதபாய ராஜபக்ஸ ரணில் விக்ரமசிங்கவை விடவும் சிறந்த தலைவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.