சர்வதேச மனித உரிமை விதிமுறைகளுக்கு அமைய புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தை உருவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்திய தலைநகர் புதுடெல்லியில் நேற்று ஆரம்பமான பயங்கரவாதத்தை தடுக்கும் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையிலுள்ள அனைத்தும் மக்களும் பயமின்றி வாழும் உரிமையை உறுதிப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை சம்பந்தமாக நிறைவேற்றப்பட்ட யோசனைகளின் முன்னேற்றங்களை அமுல்படுத்த, இலங்கை அரசுக்கு போதுமான காலத்தை வழங்குவது தொடர்பான யோசனை ஒன்று இம்முறை மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட உள்ளது எனவும்அவர் தெரிவித்துள்ளார்