மனித உரிமைப் பேரவையின் கண்காணிப்பு காரியாலயமொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இணங்கவில்லை என என மின்வலு மற்றும் எரிசக்தி பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் கண்காணிப்பு காரியாலயமொன்றை கொழும்பில் நிறுவுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள கோரிக்கைக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமைப் பேரவையின் காரியாலயமொன்று நிறுவுதல் குறித்து பல்வேறு தரப்பினர் காலத்திற்கு காலம் கருத்து வெளியிடும் போதும் அரசாங்கத்தின் நிலைப்பாடு அதுவல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை விவகாரம் குறித்து எந்தவொரு நாடும் கால வரையறைகளை நிர்ணயம் செய்யவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்