153
சிரிய தலைநகர் டமாஸ்கஸில் நீதித்துறை கட்டிட வளாகத்தில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 25 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். மக்கள் அதிகமாக கூடும் ஹமிதியே சந்தைக்கு அருகில் உள்ள நீதிமன்ற கட்டிடத்திலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ராணுவ உடையில் இயந்திர துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களுடன் நீதித்துறை கட்டிட வளாகத்திற்குள் நுழைந்த தீவிரவாதி; குண்டுகளை வெடிக்கச் செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது. வாசலில் வைத்து காவலர்கள் பரிசோதனை மேற்கொண்ட வேளையிலேயே தீவிரவாதி குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love