164
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் இல்லின் சகோதரர் எனக் கூறப்படும் கிம் ஜொங் நெமின் கொலை தொடர்பில் நான்கு வடகொரிய பிரஜைகளுக்கு சர்வதேச பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சர்வதேச காவல்துறையினர் இந்த பிடிவிராந்து உத்தரவினை பிறப்பித்துள்ளனர்.
மலேசியா விமான நிலையத்தில் வைத்து விச ரசாயனப் பொருளைப் பயன்படுத்தி நெம் கொல்லப்பட்டிருந்தார். இந்தக் கொலையுடன் தொடர்புடைய நான்கு வடகொரியர்களுக்கு இவ்வாறு சர்வதேச பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலை வடகொரிய உளவுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டது என குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love