இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோணி தீ விபத்துச் சம்பவமொன்றிலிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். இன்றைய தினம் அதிகாலை இந்த தீ விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. டெல்லியின் துவராகா பகுதியில் இந்த தீ விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விஜய் ஹஸாரே கிண்ண கிரிக்கட் போட்டியின் அரையிறுதிப் போட்டியில் பங்கேற்கும் நோக்கில் டோணி மற்றும் அவரது அணியினர் ஹோட்டலில் தங்கியிருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது. அணி வீரர்கள் விளையாட்டு உபகரணங்கள் தீக்கிரையாகியுள்ளது. இதன் காரணமாக போட்டி நாளை வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. டோணி ஜார்கன்ட் அணிக்கு தலைமை தாங்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தீ விபத்திலிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்ட இந்திய அணியின் முன்னாள் தலைவர் டோணி:-
167
Spread the love