162
ஏமன் கடல் பகுதி வழியாக சூடானை நோக்கி சென்ற படகின்மீது ஏமன் விமானப் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் சோமாலியாவைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோர் 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான படகில் சோமாலியாவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் புகலிடம் தேடி சூடானை நோக்கி சென்று கொண்டிருந்ததாக தெரிவிக்கப்;படுகின்றது. அவர்கள் அனைவரும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் முகமை வழங்கிய அடையாளச் சான்றிதழ்கள் வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது
படகில் இருந்து கடலில் குதித்து உயிர் தப்பிய சுமார் 80 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love