156
பிளாஸ்டிக் 10 ரூபாய் தாள்களை அச்சடிக்க ரிசர்வ் வங்கிக்கு அனுமதி வழங்கியுள்ளதாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் இன்று எழுப்பிய கேள்வி ஒன்று எழுத்துமூலம் பதிலளித்த மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மக்வால் இந்தியாவின் 5 பகுதிகளில் பிளாஸ்டிக் தாள்களை அச்சடித்து சோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் பிளாஸ்டிக் தாள்களை அச்சடிக்கத் தேவையான மூலப்பொருள்களை கொள்முதல் செய்யவும், பிளாஸ்டிக் தாள்களை அச்சடிக்கவும் ரிசர்வ் வங்கிக்கு அனுமதி வழங்கியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love