விளையாட்டு

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டித் தொடரில் பேஸ் போல் போட்டிகள் புக்குஷிமாவில் நடத்தப்பட உள்ளன


2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் போது, பேஸ் போல் போட்டிகள் புக்குஷிமாவில் உள்ள அசூமா விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் தலைவர் யோஷீரோ மோரி இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு புக்குஷிமாவில் ஏற்பட்ட பாரிய சுனாமி கடல்சீற்றம் காரணமாக அங்கிருந்த அணு உலையும் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், பேஸ் போல் போட்டி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விளையாட்டுத்திடல் அணு உலை கசிவினால் பெரிதும் பாதிக்கப்பட்ட பிரதேசம் என குறிப்பிடப்பட்டுள்ளது. பாரிய சேதம் ஏற்பட்ட பிரதேசத்தில் இப்படியான சர்வதேச போட்டி ஒன்றை நடத்துவதன் மூலம், அங்கு ஏற்பட்ட அனர்த்தம் குறித்த அச்சம் நீங்கும் என  2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply