Home உலகம் ட்ரம்ப் – ஹிலாரி தொடர்பான முக்கிய தகவல்கள் அடங்கிய அமெரிக்க உளவுப் பிரிவின் மடிக்கணனி திருட்டு

ட்ரம்ப் – ஹிலாரி தொடர்பான முக்கிய தகவல்கள் அடங்கிய அமெரிக்க உளவுப் பிரிவின் மடிக்கணனி திருட்டு

by admin


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஹிலாரி கிளின்டன் தொடர்பான முக்கிய தகவல்கள் அடங்கிய அமெரிக்க உளவுப் பிரிவின் மடிக்கணனி திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த வியாழக்கிழமை நியூயோர்க்கில் பெண் உளவுப்பிரிவு அதிகாரி ஒருவரின் காரிலிருந்து குறித்த மடிக்கணனி திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டிரம்ப் டவர் மற்றும் கிளின்டன் தனது சொந்த  மின்னஞ்சலை  பயன்படுத்தியமை  தொடர்பான பல புலனாய்வுத் தகவல்கள் அந்த கணினியில் உள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த கணனி பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்டது என்பதால் பலஅடுக்கு பாதுகாப்புக்களை கொண்டிருக்கும் என்றும் இரகசிய தகவல்கள் எதனையும் கணனியில் சேமித்து வைப்பதற்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.  கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் திருடியவர்களை அடையாளம் காண்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More