159
இந்தப் புகைப்படம் கடந்த வருடம் நடைபெற்ற போராட்டத்தின்போது பிடிக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிரான மண் மீட்புப் போராட்டம் வலுப்பெற்றுள்ளன. ஒரு வருடத்தின் முன்னர் எடுக்கப்பட்ட இக் காட்சி இன்றும் மாறாத நிலையில் உள்ளது. புதுக்குடியிருப்பு இராணுவத் தளத்தை முற்றுகையிட்ட மக்கள் இராணுவமே வெளியேறு நமது மண் நமக்கு வேண்டும் என்று ஓங்கிக் குரல் கொடுத்தனர்.
இராணுவமுகாமை முற்றுகையிட்டு நடத்தப்பட்ட போராட்டங்களில் இது முக்கியமானது. இந்த மக்கள் ஒரு வருடத்தின் பின்னர் இம்மாதம் நான்காம் திகதி தமது காணிகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இன்னமும் இராணுவமுகாங்களை முற்றுகையிட்டு தமது காணிகளை விடுவிக்குமாறு கோரும் போராட்டம் முல்லை மாவட்டத்தின் மாறாக் காட்சியாக தொடர்வது பல்வேறு சேதிகளை வெளிப்படுத்துகிறது.
Spread the love