பெருந்தோட்ட பாடசாலைகளில் பற்றாகுறையாக காணப்படும் கணிதம் விஞ்ஞானம் ஆங்கிலம் பாடங்களுக்கான பட்டதாரி ஆசிரியர் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணும் முகமாகவும் மலையகத்தில் பிரதமர் ரணில் விக்கரமசிங்க அவர்களின் எண்ணத்திற்கு அமைவாக தரம் உயர்த்தி அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் 25 பாடசாலைகளில் காணப்படும் கணிதம் விஞ்ஞானம் ஆங்கில ஆசிரியர் குறைபாட்டை நிவர்த்தி செய்யும் முகமாகவும் மேற்படி பாட பட்டதாரி ஓய்வு பெற்ற ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்டையில் மீண்டும் மலைய தோட்ட பாடசாலைகளுக்கு மாத்திரம் இணைந்துக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் தமிழ் வித்தியாலயத்தின் வெள்ளி விழா கொணட்டாட்டத்தில் கலந்துக் கொண்டு அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
மேலும் இந்த ஆசிரியர்களை மாகாண சபைகளின் ஊடாக தெரிவு செய்வதற்கான சுற்று நிருபத்ததை கல்வி அமைச்சு மாகாண சபைகளுக்கு அனுப்பி உள்ளதாகவும் இதன் படி இலங்கையில் எந்த ஒரு பகுதியிலும் இருந்து கணிதம் விஞ்ஞானம் ஆங்கிலம் கற்பிக்க கூடிய ஓய்வு பெற்ற பட்டதாரிகள் மாகாண சபை ஊடாக விண்ணபிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.