உலகம் பிரதான செய்திகள்

சிரியாவில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட கனேடியர்களுக்கு நட்டஈடு


சிரியாவில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட கனேடியர்களுக்கு, மத்திய அரசாங்கம் நட்டஈடு வழங்க உள்ளது. ஆறு ஆண்டுகளுக்கு முன்னதாக மூன்று கனேடியர்கள் சிரியாவில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்த சம்பவத்திற்காக குறித்த கனேடியர்களிடம், மத்திய அரசாங்கம் மன்னிப்பு கோரியுள்ளதுடன், நட்டஈட்டையும் வழங்க உள்ளது. குறித்த கனேடியர்கள் நீண்ட காலமாக தமக்கு நியாயம் கிடைக்க வேண்டுமெனக் கோரி சட்ட ரீதியாக போராட்டம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Abdullah Almalki, Ahmad El Maati  மற்றும் Muayyed Nureddin ஆகிய கனேடியர்களிடம் மத்திய அரசாங்கம் மன்னிப்பு கோரியுள்ளது. வெளிநாட்டு முகவர்களுடன் முக்கிய தகவல்களை பரிமாறிக்கொண்டதாகக் குற்றம் சுமத்தி, இந்தக் கனேடியர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த சம்பவத்தின் போது கனேடிய புலனாய்வுப் பிரிவினரும், காவல்துறையினரும் தவறிழைத்துள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. எவ்வாறெனினும், எவ்வளவு  தொகை நட்டஈடு வழங்கப்பட உள்ளது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.