174
மாகாணசபைத் தேர்தல்களை ஒத்தி வைப்பதற்கு எவ்வித அவசியமும் கிடையாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மாகாணசபைகளின் பதவிக் காலம் நிறைவடைந்ததன் பின்னர் அவற்றுக்கான தேர்தலை நடத்தாது காலம் தாழ்த்த வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடமத்திய, சபரகமுவ மற்றும் கிழக்கு மாகாணசபைகளின் பதவிக் காலம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் பூர்த்தியாகின்றது. பதவிக் காலம் பூர்த்தியானதன் பின்னர் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் என்ற ரீதியில் தேர்தலை நடத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love