கீத் நொயார் தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இராணுவ புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்றையதினம் கல்கிஸ்ஸ நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு பிரபல ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார்.
கீத் நொயார் கடத்தலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இராணுவ புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர் கைது
Mar 21, 2017 @ 02:49
கீத் நொயார் கடத்தலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இராணுவ புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு இந்த இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2008ம் ஆண்டு பிரபல ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்த விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றது. தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே சில இராணுவ புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மினுவன்கொட பிரதேசத்தைச் சேர்ந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேக நபர் இன்று கல்கிஸ்ஸ நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.