சர்வதேச கிரிக்கட் பேரவையின் தலைமைப் பதவி பெரும்பாலும் இலங்கை கிரிக்கட்டின் தலைவர் திலங்க சுமதிபாலவிற்கு வழங்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. திலங்க சுமதிபால ஸ்ரீலங்கா கிரிக்கட் மற்றும் ஆசிய கிரிக்கட் பேரவை ஆகியனவற்றின் தலைவராக தற்போது கடமையாற்றி வருகின்றார்.
இந்தியா, பங்களாதேஸ், சிம்பாப்வே, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் திலங்கவிற்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள நிலையில் மேற்கிந்திய தீவுகள் அல்லது தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளில் ஒன்றின் ஆதரவுடன் இந்தப் பதவிக்கு திலங்க நியமிக்கப்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கட் பேரவையின் தலைவராக கடமையாற்றி வந்த இந்தியரான சசாங்க் மனோகர் அண்மையில் பதவி விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.