பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஸ டி சில்வா ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பங்கேற்க உள்ளார். அமர்வுகளில் இலங்கை பிரதிநிதிகள் குழுவிற்கு தலைமை தாங்கும் வகையில் பிரதி அமைச்சர் ஹர்ஸ டி சில்வா ஜெனிவாவிற்கு சென்றுள்ளார்.
அமெரிக்கா, பிரித்தானியா, மொன்ரனிக்ரோ ஆகிய நாடுகள் இணைந்து கடந்த 13 ஆம் திகதி மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் சமர்ப்பித்திருந்த இலங்கை தொடர்பான உத்தேச பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்குவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தது.
குறித்த பிரேரணைக்கு ஆதரவு அளிப்பதாக, அவுஸ்ரேலியா, கனடா, ஜேர்மனி, இஸ்ரேல், ஜப்பான் மற்றும் நோர்வே ஆகிய நாடுகளும் அறிவித்துள்ள நிலையில் மேலும் சில நாடுகளும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.