கொள்கலன்கள் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்ற துறைமுகங்களுள் மிக வேகமான வளர்ச்சியை கொண்ட இரண்டாவது துறைமுகம் கொழும்பு துறைமுகமென தெரிவித்த துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்கஇவ்வளர்ச்சி வீதமானது 10.6 வீதமாக பதிவுச் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
மொரோக்கோவில் நடைபெற்ற சர்வதேச கிரான்ஸ் மொன்டான சமுத்திரவியல் மகாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்சமயம் இலங்கையில் சமாதானமான அரசியல் சூழ்நிலை நிலவுகின்றது எனவும் முதலீட்டாளர்கள் மற்றும் அரசாங்கம் மிகவும் நட்புடன் செயற்படுகின்றன எனவும் இதன் காரணமாக கொழும்பு , ஹம்பாந்தோட்டை, காலி மற்றும் திருகோணமலை ஆகிய வணிக துறைமுகங்களில் முதலீடுகள் மேற்கொள்வது தொடர்பாக முதலீட்டாளர்கள் அவதானத்தை செலுத்த இயலும் எனவும் இம்முதலீட்டு சந்தர்பங்கள் தொடர்பாக அறிந்துக்கொள்ளும் பொருட்டு எங்கள் நாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.