ஓபிஎஸ் அணிக்கு அதிமுக புரட்சித் தலைவி அம்மா என்ற பெயரையும் இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை சசிகலா அணிக்கு அதிமுக அம்மா என்ற பெயரும் தொப்பி சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
சசிகலா, ஓ. பன்னீர் செல்வம் ஆகிய இரு அணிகளும் உரிமை கோரியதனால் ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்த தேர்தல் ஆணையம் அதிமுக என்ற பெயரையும் பயன்படுத்த தடை விதித்திருந்தது.
அத்துடன் இரு அணிகளும் தங்களுக்கு தேவையான பெயரை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் எனவும் விருப்பப்பட்டால், அதில் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியின் மூலப் பெயரையும் சேர்த்துக் கொள்ளலாம் எனவும் தேர்தல் ஆணையகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.