146
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய எச்சரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றில் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றத்தையும் சக உறுப்பினர்களையும், பாராளுமன்ற உறுப்பினர்கள் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ள அவர் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் தொடர்பில் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துக்களை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் பின்பற்றப்பட வேண்டியது மிகவும் அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love