173
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று மாலை பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்றின் மீது லொரி ஒன்று மோதிய விபத்தில் 5 மாணவிகள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளனர். இன்று மாலை 4 மணி அளவில் 18 கல்லூரி மாணவிகளை ஏற்றிக் கொண்டு சென்ற வாகனத்துடன் லொறி மோதியதில் ஏற்பட்ட விபத்திற்குள்ளானதில் 5 மாணவிகள் உயிரிழந்ததுடன் காயமடைந்த 8 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை மோசமாக உள்ளதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது
Spread the love