183
போதைக்கு முற்றுப்புள்ளி வைக்க வந்த நல்லாட்சி ,மதுபான உற்பத்தி தொழிற்சாலைகளுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கி குடியை ஊக்குவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்த நாட்டில் போதைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக மார்தட்டிக்கொண்டு வந்த இவ் அரசாங்கம், இன்று மதுபான உற்பத்தி தொழிற்சாலை அமைக்க அனுமதிப்பத்திரம் வழங்கி குடியை ஊக்குவிக்கின்றது எனவும் நல்லாட்சி என்பது பேச்சில் மாத்திரமே உள்ளது எனவும் குறிப்பிட்டார்.
Spread the love