மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் விஷம் குடித்து தற்கொலை செய்வதை தவிர வேறு வழி இல்லை என்று டெல்லியில் 11-வது நாளாக போராடும் தமிழக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
வார்தா புயல், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு 40 ஆயிரம் கோடி ரூபா நிவாரணம் வழங்க வேண்டும், நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைக்க வேண்டும் , விவசாயிகளின் வங்கி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன’ எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மாதந்தோறும் ஓய்வுதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து 84 விவசாயிகள் கடந்த 11 நாட்களாக தலைநகர் டெல்லியில் போராடி வருகிறார்கள். மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக தினமும் விதவிதமாக போராடுகிறார்கள்.
இந்தநிலையில் மத்திய அரசாங்கம் விவசாயிகள் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் உள்ளது. நிதி அமைச்சர் அருண் ஜெட்லி; பொறுத்திருங்கள் நடவடிக்கை எடுப்போம் எனத் தெரிவிக்கின்றார் எனவும் பொறுத்திருந்ததால் 400 விவசாயிகளுடைய உயிர் பறிபோனது போல் அடுத்த ஆண்டுக்குள் 4 லட்சம் விவசாயிகளுடைய உயிர் பறிபோய் விடும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் மத்திய அரசு தமது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை டெல்லியிலிருந்து நகர மாட்டோம் எனவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முடியாது என பிடிவாதம் பிடித்தால், நாங்கள்; விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்வோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.