149
சீனாவில் தங்க சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி எட்டு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து நேற்று இடம்பெற்றதாகவும் அதன்போது 18 சுரங்கத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்பாராத விதமாக வெளிவந்த புகையே தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்திற்கு காரணம் என என சந்தேகிக்கப்படுவதாகவும் எனினும் விபத்துக்கான சரியான காரணத்தை கண்டறியும் பொருட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் உள்ளுர் செய்திகள் தெரிவிக்கின்றன.
Spread the love