169
பிரான்ஸின் வடக்கு பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் வடக்கு பகுதியில் லீலே நகரப்பகுதியில் அமைந்துள்ள மெட்ரோ புகையிரத நிலையத்தில் நேற்றிரவு இனந்தெரியாத நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக பிரான்ஸ் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
Spread the love