ரஸ்யாவிற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் மாலை இலங்கையை வந்தடைந்தார். இலங்கைக்கும் ரஸ்யாவிற்கும் இடையில் உள்ள அறுபது வருடகால தொடர்பினை வலுப்படுத்திக்கொள்ளும் வகையில் ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினால் விடுக்கப்பட்ட விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
சுமார் 43 வருடங்களின் பின்னர் இலங்கை அரச தலைவர் ஒருவர் ரஸ்யாவிற்கான பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளமை இதுவே முதல் தடவையாகும். இந்த பயணத்தின் போது ரஸ்ய ஜனாதிபதி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்தார்.
இதன்போது இலங்கையின் பல்துறை அபிவிருத்தி நிலைகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.