கலப்பு நீதிமன்ற விசாரணைப் பொறிமுறையை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர விரும்புவதாக ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். இலங்கையில் யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகள் உள்வாங்கப்படுவதை விரும்பும் சிலர் பல்வேறு பிரச்சாரங்களை முன்னெடுத்துவருவதாக குறிப்பிட்டுள்ளார்.
பதுளையில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில்இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ள அவர் கலப்பு நீதிமன்றத்தை தாம் எதிர்ப்பதாகவும், இந்த கலப்பு நீதிமன்றத்தை உருவாக்க வெளிவிவகார அமைச்சர் விரும்புகின்றார் எனவும் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் அல்ல யார் விரும்பினாலும் கலப்பு நீதிமன்றம் உருவாக்கப்படமாட்டாது எனவும் ஜனாதிபதி கலப்பு நீதிமன்றத்தை விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.