இலங்கை

சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது


அனைத்து தேர்தல்களையும் ஒத்தி வைத்து விட்டு அவசரமாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்த அரசாங்கம் முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. புதிய அரசியல் சாசனத்தை நிறைவேற்றும் நோக்கில் இவ்வாறு சர்வஜன வாக்கெடுப்பு நடத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் மற்றும் மாகாணசபைத் தேர்தல்களுக்கு முன்னதாக இந்த சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாகவும் கடந்த தேர்தலில் வாக்குறுதி அளிக்கப்பட்டதற்கு இணங்க நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply