155
பிரித்தானியாவில் பாராளுமன்றத்திற்கான பாதுகாப்பு குறித்து மீளாய்வு செய்யப்பட உள்ளது. அண்மையில் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதனைத் தொடர்ந்து இவ்வாறு மீளாய்வு செய்யப்பட உள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் தாக்குதல்தாரி, காவல்துறை உத்தியோகத்தர் ஓருவர் உள்ளிட்ட ஐந்து பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னரே பாதுகாப்பு குறைபாடுகள் காணப்பட்டதா என்பது குறித்து விபரங்களை வெளியிட முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் காலங்களில் அடிக்கடி பாதுகாப்பு குறித்து மீளாய்வு செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love