மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் குற்றவாளியாக நிரூபிக்கப்படும் என எவருக்கும் மன்னிப்பு கிடையாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதனைத் தெரிவித்துள்ள பொது முயற்சியான்மை அமைச்சர் கபீர் ஹாசிம் அரசாங்கம் முதல் தடவையாக தங்களது அதிகாரிகளையே விசாரணைக்கு உட்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் தராதரம் பாராது தண்டிக்கப்படுவர் எனவும் விசாரணைகளை சுயாதீனமாக நடாத்த பூரண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி நிலைமை ஏற்படும் என்பதனை புரிந்து கொண்டுதான் மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே வைத்தார் என கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.